முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாயத்து உறுப்பினர்கள் சஸ்பெண்ட்: மகராஷ்டிர அரசு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூன். 3 - திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழித்தார்கள் என்ற குற்றத்திற்காக, அதிரடியாக 354 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது மகாராஷ்டிரா அரசு. திறந்த வெளியில் கழிப்பிடத்தை உபயோகப்படுத்துவதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் உண்டாகின்றன. இதன் காரணமாக பல்வேறு நோய்களும் பரவுகின்றன. அதனை களையும் நோக்கில் சம்பூர்ணா சுவாச்சட்டா அபியான் என்ற திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. முத்ற்கட்டமாக கிராமங்களில், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாநில ஊரக மேம்பாட்டு அமைச்சகம், கிராம பஞ்சாயத்துகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி தேர்தெடுக்கப்பட்ட சில பஞ்சாயத்து உறுப்பினர்கள், கிராம சேவகர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வீடுகளில் கட்டாய கழிவறை வசதி இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டது. 

ஆனாலும், உத்தரவை மதிக்காமல், தொடர்ந்து 354 பஞ்சாயத்து உறுப்பினர்களின் வீடுகளில் கழிவறை வசதி செய்யப்படாமல் இருந்தது மாவட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரிய வந்தது. கழிவறைகளை அமைத்துக்கொள்ள உரிய அவகாசம் அளிக்கப்பட்டும், கழிவறைகளை கட்டாத 354 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள். பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களில், 27 பேர் சந்திராபூர் பஞ்சாயத்து, 17 பேர் பத்ராவதி பஞ்சாயத்து, 15 பேர் வரோரா, 7 பேர் சிமூர், 9 பேர் சிண்டேவாஹி, 15 பேர் முல், 18 பேர் சவோலி, 14 பேர் டொம்புர்னா, 64 பேர் கோண்ட்பிப்ரி, 17 பேர் பல்லார்பூர், 54 பேர் ரஜுரா, 33 பேர் கோர்ப்பனா, 58 பேர் ஜிவ்டி பஞ்சாயத்தை சேர்ந்த உறுப்பினர்கள் ஆவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்