முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1,500 கோடியில் அதிநவீன பிரமோஸ்-2 ஏவுகணை

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

திருவண்ணாமலை, ஜூன். 3 - ரூ. 1,500 கோடி செலவில் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட பிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக புது டெல்லி பிரமோஸ் ஏரோஸ் ஸ்பேஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சிவதானு பிள்ளை கூறினார். திருவண்ணாமலைக்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

ஒரே சீரான வேகத்தில் மற்றும் உயரத்தில் சென்று எதிரிகளை தாக்கும் வல்லமை கொண்ட பிரமோஸ் ஏவுகணை இந்தியாவில் மட்டுமே உள்ளது. இது எதிரிகள் எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி குறைந்த  அளவு சப்தத்துடன் இயங்கும் திறன் கொண்டது. மிக குறைந்த உயரத்தில் செல்லும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒலியை விட மூன்று மடங்கு வேகம் கொண்டது. இதை ரேடார் மூலம் கண்காணிக்க முடியாது. தற்போது ரூ. 1,500 கோடியில் அதிநவீன பிரமோஸ் -2 ஏவுகணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வகை ஏவுகணை ஒலியை விட 7 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும். இன்னும் 5 ஆண்டுகளில் இப்பணி முடிவடையும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago