முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமயமலையில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு ரயில்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.3 - இமயமலையில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலின் அடிவார முகாமிற்கு வரும் ஜூலை முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் இனிமேல் கோயிலுக்கு எளிதாக சென்றுவர முடியும். இமயமலையையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் குகைக்கோயில் மற்றும் வைஷ்ணவ தேவி ஆகிய புனிதமிக்க இந்துக்கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருவார்கள். இந்த கோயில்களுக்கு மலைப்பாதையாக நடந்து செல்ல வேண்டியிருப்பதால் பக்தர்கள் சிரமப்பட்டனர். இதை போக்கும் வகையில் வைஷ்ணவ தேவி கோயிலுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது உதம்பூரில் இருந்து வைஷ்ணதேவி கோயில் இருக்கும் மலை அடிவாரத்தில் உள்ள கத்ரா முகாம் வரைக்கும் சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன்பணி விரைவில் முழுமையாக முடிந்துவிடும். இதனையொட்டி வரும் ஜூலை மாதத்தில் இருந்து உதம்பூரில் இருந்து கத்ரா முகாம் வரை மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. கத்ராவில் ரயில்நிலையம் அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டதாக தெரிகிறது. ரயில் போக்குவரத்து தொடங்குவதற்காக அந்த ரயில்பாதையை நிறுவகிக்கும் ரயில்வே பாதுகாப்பு கமிஷனரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும் ரயில்வே வாரிய தலைவர் வினாய் மிட்டல், வடக்கு ரயில்வே மண்டல பொதுமேலாளர் வி.கே. குப்தா ஆகியோரும் ரயில் பாதையை பார்வையிட உள்ளனர். மேலும் பெனிகல்-குவஜிகுந்த் ரயில்பாதையை ஏற்கவனே உயர்மட்ட குழு சென்று பார்வையிட்டது. உதம்பூர்-கத்ரா ரயில்பாதையில் போக்குவரத்து தொடங்கியதும் அந்த வழியாக புதுடெல்லி-உதம்பூர்- உத்தர்-சம்பார்க் கிராந்தி,ஜம்மு மெயில்,சண்டிகார்-கத்ரா எக்ஸ்பிரஸ், டெல்லி சாரை ரோஹிலா-உதம்பூர் எக்ஸ்பிரஸ், அகமதாபாத்-உத்ம்பூர் எக்ஸ்பிரஸ், டெல்லி, பதான்கோட் எக்ஸ்பிரஸ் மற்றும் பல ரயில்கள் அந்த மார்க்கமாக சென்று வரலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்