முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,ஜூன்.3 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் நேற்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலம் முடிந்துவிட்டதால் தீவிரவாதிகள் அடிக்கடி இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயற்சி செய்து வருகிறார்கள். இந்திய பகுதிக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு கேடயமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்திய ராணுவ வீரர்களின் கவனத்தை திசை திருப்பி தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் நரிச்செயலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக கடந்த பல நாட்களில் பல முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதை புரிந்துகொண்ட இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானையொட்டி பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர். அதையும் மீறி காஷ்மீரில் உள்ள நவ்கம் பகுதியில் தீவிரவாதிகள் நேற்றுமுன்தினம் இரவு ஊடுருவ முயன்றனர். இதை அறிந்த இந்திய ராணுவத்தினர் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை நோக்கி சுட்டனர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தினர் யாரும் காயம் கூட அடையவில்லை என்று ராணுவ அதிகாரி நரேஷ் விஜ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ஊடுருவ முயன்ற மேலும் 4 தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய காவல் நிலையங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 2 வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரி ஒருவர் லேசனா காயம் அடைந்ததாக தெரிகிறது. வரும் டிசம்பர் மாதம் குளிர்காலம் தொடங்கும்வரை பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் தினமும் ஊடுருவ முயற்சி செய்வார்கள். இதை கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீர் பகுதியில் எல்லையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்