முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப அரசியல் நடத்தும் காங்கிரஸ்: அருண் ஜேட்லி தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

குவாலியர்,ஜூன்.3 - காங்கிரஸ் கட்சி கும்ப அரசியல் நடத்தி வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் ஜேட்லி பேசியதாவது, 

ஆட்சிப் பொறுப்பை ராகுல் காந்திக்கு வழங்குவதற்கான முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் இந்திய ஜனநாயகம் வம்சாவழி அடிப்படையிலானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நேரத்தில் நாட்டை வழிந்டத்த வேண்டியது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்த தலைவர் மட்டுமா, மாநிலங்களா அல்லது திறமையான ஒருவரா என்பது குறித்த விவாதத்தை தொடங்கி வைக்கவேண்டியது அவசியமாகிறது. 

முன்னாள் பிரதமர் வாஜ்பேயி, அத்வானி, மோடி, சிவராஜ்சிங் செளகான், மற்றும் ராமன்சிங் உள்ளிட்ட பா.ஜ.க தலவர்கள் குடும்பப் பின்னணியின் அடிப்படையில் அல்லாமல் தங்களுடைய கடின உழைப்பின் மூலம் மட்டுமே உயர்ந்தவர்கள். 

பிரதமர் மன்மோகன்சிங் சிறந்த நிர்வாகத்தை தரத்தவறி விட்டார். மாறாக அவரது தலைமையிலான அரசு நமது வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஊழல் மலிந்த அரசாக மாறிவிட்டது. இது வரை இல்லாத வகையில் முதன்முறையாக அரசின்செயல் பாடுகள் முடங்கிக் கிடக்கன்றன. பொருளாதார வளர்ச்சி 4 சதவீதமாக குறைந்துள்ளது. இது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. நாடுமுழுவதும் நக்சல்களை ஒடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஓரே நாளில் நிகழ்ந்த தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள நக்சல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜயசிங் மற்றும் மணிசங்கரய்யர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டிலேயே நக்சல்களுக்கு எதிராக கடுமையான நடவடக்கை எடுக்கும் அரசு என்றால் அது ராமன் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு மட்டும் தான். சிவராஜ்சிங் செளகான் தலைமையிலான மத்திய பிரதேச அரசு சாலை , மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago