முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவானில் கடும் நிலநடுக்கம்: இருவர் சாவு

திங்கட்கிழமை, 3 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

தைபே, ஜூன்.4 - தைவானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட  கடுமையான  நிலநடுக்கத்தில்  இருவர்  உயிரிழந்தார்.  தலைநகர்  தைபேயில் உள்ள  கட்டடங்கள்  குலுங்கியதால் மக்கள் பீதிக்குள்ளாயினர்.  நன்டோவ்  நகரில் இருந்து  32 கிலோ மீட்டர் தொலைவில்  இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்  6.3 அலகுகளாகப் பதிவானதாக தைவான்  நிலநடுக்க   ஆய்வு மையம் தெரிவித்தது.  தைவானின் மத்தியில்  உள்ள மெளண்ட் அலி பகுதியில்  பாறை விழுந்து  மலையேறும் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மலைப்பகுதியில் காரில் சென்ற   ஒருவரும்  பாறை விழுந்து  பலியானார்.   நிலநடுக்கத்தைத்  தொடர்ந்து ரயில் சேவை சிறிது  நேரம்  நிறுத்தப்பட்டது.   தண்டவாளங்கள் சரிபார்ப்புக்குப் பின் ரயில் சேவை தொடங்கப்பட்டது. நிலநடுக்கத்தினால்  உண்டான சேதாரங்கள்  குறித்த  தகவல் தெரியவில்லை.  இந்நிலநடுக்கம்  தைவானில் இருந்து  700 கிலோ மீட்டர்  தொலைவில்   உள்ள ஹாங்காங்கிலும் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிலிப்பின்ஸ் : பிலிப்பின்ஸின் வடக்கு  கோட்டா படோ மாகாணத்தில்  சனிக்கிழமை  ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால்  33 பேர் காயமடைந்தனர்.  இந்நிலநடுக்கம்  ரிக்டர்  அளவுகோலில்  5.7 அலகுகளாகப் பதிவானது.  நிலநடுக்கத்தினால் சாலைகள்  மற்றும்  பாலங்களில்  வெடிப்புகள்  ஏற்பட்டதாக  கடாபடோ மாகாண ஆளுநர் தெரிவித்தார். நிலநடுக்கத்தினால்  சில இடங்களில்  நிலச்சரிவு  ஏற்பட்டது.  இதில் 140 ​- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்