முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது எப்போது? சி.பி.ஐ. விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, மே - 2 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதற்கு முன்பு கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதாகவும், ஆ.ராசா தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு அந்தப் பணம் திரும்ப கொடுக்கப்பட்டதாகவும் சி.பி.ஐ. விளக்கமளித்துள்ளது.  2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையை நடத்திவரும் மத்திய புலனாய்வுத் துறை கலைஞர் டி.வி.க்கு ரூ. 200 கோடி எப்போது கைமாறியது என்பது குறித்த கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.  2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் ரூ.200 கோடி  கலைஞர் டி.வி.க்கு கைமாறியுள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. டி.பி.ரியாலிட்டி நிறுவத்தின் கணக்காளர் ஒருவரின்  அறிக்கை சினியூக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனரின் அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது இந்த பணம் 2008 டிசம்பர் 3 ம் தேதிக்கும் 2009 ஆகஸ்ட் 7 ம் தேதிக்கும் இடையே உள்ள காலகட்டத்தில்  ஷாகித் உஸ்மான்  பல்வாவின் நிறுவனத்தின் மூலமாக இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு கைமாறியுள்ளது என்று சி.பி.ஐ. விளக்கியுள்ளது.
கலைஞர் டி.வி.யில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், மகள் கனிமொழிக்கு 20 சதவீதமும், நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ம் தேதி மத்திய தொலைத் தொடர்பு துறையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்களின் மீது சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. பணப் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தங்கள் 2010 ஜனவரி 27 ல் துவங்கியுள்ளன என்றும் சி.பி.ஐ. கூறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்