முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவு பாதுகாப்பு மசோதா கூட்டத்தை எதிர்க்கவில்லை

திங்கட்கிழமை, 3 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன். 4 - உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்காக   நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்  கூட்டுவதை  பா.ஜ.க.  எதிர்க்கவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்  சுஷ்மா ஸ்வராஜ்  கூறியுள்ளார்.  இது தொடர்பாக  அவர் ஞாயிற்றுக்கிழமை  கூறியதாவது:  உணவு பாதுகாப்பு மசோதாவை  நிறைவேற்ற   இயலாத  பட்சத்தில்   அவசரச் சட்டத்தை   மத்திய அரசு   பிறப்பிப்பது  சரியான  வழிமுறை   இல்லை. இம்மசோதாவை  நிறைவேற்றுவதற்காக  நாடாளுமன்ற   சிறப்பு கூட்டத்தை   கூட்டுவதை பா.ஜ.க.  எதிர்க்கவில்லை.  எனினும்  ஜூலை மாதம் நடைபெற வேண்டிய   நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரை முன்னரே  நடத்துவது  இதற்கு சிறந்த  தீர்வாக   அமையும் என்றார் ஸ்வராஜ்.  இதற்கிடையே உணவு பாதுகாப்பு  மசோதா தொடர்பாக  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  திங்கள் கிழமை நடைபெறுகிறது.  உணவு பாதுகாப்பு மசோதா  தொடர்பாக  காங்கிரஸ் கட்சியின்  உயர்நிலைக் குழுவும் ஆலோசனை மேற்கொண்டது. நாடாளுமன்ற  விவகாரத்துறை அமைச்சர் கமல் நாத்  அனைத்துக் கட்சிகளிடமும் சிறப்பு கூட்டத்தை  கூட்டுவது தொடர்பாக  ஆலோசனை மேற்கொள்வார் எனத்தெரிகிறது.  அனைத்துக் கட்சி கூட்டத்தை  நடத்தவும்  அரசு திட்டமிட்டுள்ளது. இதில் எந்த முடிவும்  எட்டப்படவில்லை என்றால்  அவசரச் சட்டத்தை  பிறப்பிக்க  காங்கிரஸ்  உயர் நிலை  குழு திட்டமிட்டுள்ளது.  தற்போது  உணவு பாதுகாப்பு  மசோதாவை   நிறைவேற்றும்  விவகாரத்தில்   பா.ஜ.க.வும்  ஆதரவு தெரிவித்துள்ளது. 

கடந்த பட்ஜெட்  கூட்டத்தொடரின்   இரண்டாம்  பகுதி  எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்  நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்