முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் நாணயங்களை எண்ண நவீன எந்திரம்

திங்கட்கிழமை, 3 ஜூன் 2013      ஆன்மிகம்
Image Unavailable

நகரி, ஜூன்.4 - திருப்பதி ஏழுமலையான்  கோவிலுக்கு  வரும் பக்தர்கள்  உண்டியலில்    ரூபாய், நோட்டுகள், நாணயங்கள், தங்கம், வெள்ளி  நகைகளை  காணிக்கையாக   செலுத்துகிறார்கள்.  இந்த காணிக்கை  பொருட்கள்  தினமும்  எண்ணப்படுகிறது.   தினமும்  மூட்டை மூட்டையாக   குவியும்   நாணயங்கள்  திருப்பதியில்  உள்ள காணிக்கை  எண்ணும்   இடத்துக்கு   கொண்டு செல்லப்படுகிறது.  ஒவ்வொரு  மூட்டையும் 30 கிலோ எடை  கொண்டதாக   இருக்கும்.   இதனை ஊழியர்கள்  தூக்கி  செல்வதால்   பக்தர்கள்   தரிசனத்துக்கு   இடையூறு   ஏற்படுவதாக  கருதிய   தேவஸ்தான   என்ஜினீயரிங் பிரிவு,   நவீன ராட்சத எந்திரம்  தயாரித்து உள்ளது.  இதற்காக   கோவிலில்  இருந்து  ராட்சத    கண்டெய்னர்  பெல்ட்  அமைக்கப்பட்டு   உள்ளது.  தங்க கோபுரம்   அருகே  கண்டெய்னர் பெல்ட்  செல்ல இரும்பு  பாலம்  அமைக்கப்பட்டு  உள்ளது.  மேலும் இந்த  எந்திரத்துக்காக  கோவில்  பிரகாரத்தின்  சுவர்  இடிக்கப்பட்டது.  இதற்கு   பக்தர்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  தங்க கோபுரத்தின்   அழகை  இரும்பு  பாலம் மறைக்கிறது.   என்று  குற்றம் சாட்டினார்கள்.   மேலும்,  பல்வேறு   தரப்பில்   இருந்து எதிர்ப்பு  கிளம்பியதால்   இந்த எந்திரம்  பயன்படுத்தப்படாமல் முடக்கி  வைக்கப்பட்டு  உள்ளது.   தொழில்நுட்பம்  என்ற  பெயரில்  கோவிலின்  ஆகமவிதிகள்   மீறப்படுவதாக   திரிதண்டி சின்ன ஜூயர்  சுவாமிகள்  குற்றம்சாட்டினார்.   நவீன எந்திரத்தை  எதிர்த்து  வழக்கு  தொடர  அவரது  சீடர்கள்  முடிவு செய்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்