முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவம்பரில் உலகக் கோப்பை கபடி: சுக்பிர் சிங் பாதல்

திங்கட்கிழமை, 3 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

சண்டீகர், ஜூன்.4  - நான்காவது உலகக் கோப்பை  கபடி போட்டி  வரும்  நவம்பரில்   நடைபெறவுள்ளதாக   பஞ்சாப்   துணை   முதல்வர்  சுக்பிர் சிங் பாதல்  தெரிவித்துள்ளார். பஞ்சாபில்  கட்டப்பட்டு வரும் விளையாட்டு  மைதானங்கள்   தொடர்பான  ஆய்வுக்கூட்டம்  தலைநகர்    சண்டீகரில்   ஞாயிற்றுக்கிழமை   நடைபெற்றது. இதன் பிறகு  அவர் மேலும்  கூறியது. இந்த ஆண்டு  நடைபெறவுள்ள   4​​- வது உலகக் கோப்பை  போட்டியில் இந்தியா உள்பட    25 நாடுகள்  பங்கேற்கின்றன.  இந்த போட்டியின் போது  தீவிரமான   ஊக்கமருந்து   தடுப்பு சோதனை   மேற்கொள்ளப்படும்.    கபடி விளையாட்டுக்கு   உலகத்தர அந்தஸ்து கொடுக்கும்  வகையில்  உலகக் கோப்பை  போட்டிக்கு  அதிக  அணிகளை  அனுப்புமாறு   ஐரோப்பா, ஆப்பிரிக்கா  மற்றும்  அமெரிக்க நாடுகளை  கேட்டுக்

கொண்டுள்ளோம். 2020  ஒலிம்பிக்  போட்டியில்  கபடியை சேர்ப்பது தொடர்பாக  சர்வதேச  ஒலிம்பிக்  கவுன்சிலிடம்  பஞ்சாப்   அரசு பேச்சுவார்த்தை  நடத்தும்.  மேலும் 4  நாடுகள்   ஹாக்கிப் போட்டியை  இங்கு நடத்துவது   தொடர்பாக  இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை நிர்வகிக்கும்  அமைப்பான  ஹாக்கி  இந்தியா  மற்றும் சர்வதேச   ஹாக்கி இந்தியா  மற்றும் சர்வதேச   ஹாக்கி  சம்மேளனம்  ஆகியவற்றுடன்  கலந்தாலோசிக்குமாறு விளையாட்டுத் துறை   செயலர்  அசோக்  குப்தாவிடம்  கூறியுள்ளேன் என்றார். விளையாட்டுக்கு  உலகத்தரம்  வாய்ந்த உள்கட்டமைப்புகள்   வசதிகள் வேண்டும் என்பதை  வலியுறுத்திய பதால், ரூ.96 கோடியில்   11 விளையாட்டு   மைதானங்கள்   வரும்  டிசம்பருக்குள்   தயாராகி   விடும்.  அதில் 8 மைதானங்கள்  இரவிலும்  போட்டியை  நடத்தும் வகையில்  ஒளி விளக்குகளுடன்  அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago