முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிட் வீசியதில் உயிரிழந்த பெண்ணுக்கு நஷ்டஈடு போதாது

திங்கட்கிழமை, 3 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.4 - மும்பை ரயில் நிலையத்தில் ஆசிட் வீசியதில் உயிரிழந்த டெல்லியைச் சேர்நத பெண்ணுக்கு, காங்கிரஸ் தலைமையிலான மராட்டிய மாநில அரசு வழங்கிய உதவித்தொகையான ரூ. 2 லட்சம் போதாது என்று பாஜக தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். 

இதுபற்றி டுவிட்டரில் அவர் கூறியுள்ளாதாவது:

இந்தப் பணம் மொத்தத்தில் போதுமானதாக இல்லை. இது அவரை இழிவு படுத்துவதாக உள்ளது என்றும் சுஷ்மா கருத்து தெரிவித்துள்ளார். இந்த நஷ்டஈடு பணம் உயிரிழந்த அவரது உயிருக்கு ஈடாகாது. மேலும் அவருக்கு வழங்கப்படும் இந்த 2 லட்சம் ரூபாய் அவரது காயத்துக்கு மேலும் ஒரு இழுக்காகும் என்றும் சுஷ்மா கூறியுள்ளார். 

   பிரீத்தி ரதி என்ற 23 வயது பெண் மீது ஆசிட் வீசப்பட்டதில் காயமடைந்த அந்த பெண் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். ஆனால் அவர் இரண்டு நாள்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.

அவர் மீது ஆசிட் வீசப்பட்டது கொடுமையான செயலாகும்.  அதைவிட கொடுமையானது ஆசிட் வீசியவர் இன்னும் பிடிபடாமல் உள்ளார். இது துரதிருஷ்டவசமானதாகும் என்றும் சுஷ்மா கூறியுள்ளார். பந்த்ரா ரயில் நிலையத்தில், புதுடெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து இறங்கிய பிரீத்தி ரதி மீது யாரோ ஒருவர் ஆசிட் வீசினார். பிரீத்தி ரதி மும்பை ராணுவ மருத்துவமனையில் புதிதாக நர்ஸ் வேலைக்கு சேருவகதற்காக மும்பை வந்த இவர் மீது மர்ம நபர் ஆசிட் வீசியிள்ளார்.  உடனடியாக இவரை மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் 2 நாள்கள்மட்டுமே உயிர் வாழ்ந்தார். ஆசிட் வீசி காயமடைந்ததில் அவரது நுரையீரல் உள்ளிட்ட முக்கியமான பல உறுப்புகள் சேதமடைந்தன. மும்பை தனியார் மருத்துவமனை  டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பிரீத்தி ரதி உயிரிழந்தார். 

அவரது உடல் விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டது என்று பிரீத்தி ரதியின் தந்தை அமர்சிங் ரதி கண்ணீர் மல்க தெரிவித்தார். இதற்கிடையில் உயிரிழந்த பிரீத்தி ரதியின் குடும்பத்தினர் மராட்டிய மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பட்டீலை சந்தித்து தங்களது மகள் சாவுக்கு நீதிகேட்டனர். அந்த பெண் சாவுக்குக் காரணமான குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் அமைச்சரிடம் வற்புறுத்தினர்.

உயிரிழந்த பிரீத்தி ரதியின் குடும்பத்தினருத்கு மராட்டிய மாநில அரசுரூ.2 லட்சம் நஷ்ட ஈடாக வழங்குவதாதவும், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பதாகவும் அமைச்சர் பட்டீல்  அவர்களிடம் உறுதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்