முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபில் ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம்

திங்கட்கிழமை, 3 ஜூன் 2013      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.4 - பஞ்சாபில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் ரூ. 500 கோடியை ஹவாலா முறையில் சட்டவிரோதமாக  பரிமாறிக் கொண்டதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.  பஞ்சாபில் எல்லைப் பகுதியில் போதை மருந்து கடத்தல் நடைபெறுவதாகக் தகவல் கிடைத்தது. இதையடுத்து,கடந்த 6 மாதங்களாக  அமலாக்கத்துறையினர்  மேற்கொண்ட  சோதனையின் போது, போதை மருந்து  கடத்தல், ரியல் எஸ்டேட்   உள்பட  சட்ட விரோத  நடவடிக்கைகள்   மூலம் சம்பாதித்த   பணம் தொடர்ந்து கைமாறியது  தெரியவந்துள்ளது.  ஜலந்தர், லூதியானா, சண்டீகர், பக்வாரா  உள்ளிட்ட  சில நகரங்களில்  ஹவாலா  நடவடிக்கையில் ஈடுபட்ட  தரகர்களை தங்கள்  கண்காணிப்பு   வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது அமலாக்கத்துறை.  சட்ட விரோத  பணப் பரிவர்த்தனையில்  ஈடுபட்டவர்களின்  சொத்துகளைப் பறிமுதல் செய்யவும்  அமலாக்கத்துறையினர்   திட்டமிட்டுள்ளனர்.  ஹவாலா ஊழலில்  ஈடுபட்டுள்ளவர்கள்   மீது அன்னியச் செலாவணி நிர்வாக சட்டத்துக்கு  (ஃபெமா)  பதிலாக, மிகக் கடுமையான சட்ட விரோத  பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்கு பதிவு செய்யவும்  திட்டமிடப்பட்டுள்ளது.   பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ்  குற்றம் சாட்டப்பட்ட நபரின்  சொத்துகளை   பறிமுதல்  செய்யவும்,  ஜாமீன்  மறுக்கவும் முடியும். ஆனால்  ஃபெமா  சட்டத்தின் கீழ்  அதிகபட்சமாக   300 சதவீதம்  அபராதம்  செலுத்தி  விட்டு குற்றம் சாட்டப்பட்டவர்  தப்பி விட முடியும்.  சட்ட விரோத  செயல்கள்  மூலம்  சம்பாதிக்கப்படும்  பணத்தை, ஒரிடத்திலிருந்து  வேறு இடத்துக்கு  (வெளிநாடு உள்பட) ஒரு நெட்வொர்க்  மூலம்  பரிமாற்றம்  செய்வது  ஹவாலா  எனப்படுகிறது.  இதன்மூலம்  வரி ஏய்ப்பு  செய்யப்படுவதுடன்  கறுப்புப் பணம்  உருவாக  வழிவகை  ஏற்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago