முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேள்வி கேட்க லஞ்சம்: எம்.பி.க்கள் மீது குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 3 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜூன்.4 - பிரிட்டன்  நாடாளுமன்றத்தில்  கேள்வி கேட்பதற்கும், நிறுவனத்துக்கு  ஆதரவாக  செயல்படுவதற்கும்  லஞ்சம்  கேட்டதாக  3 எம்.பி.க்கள் மீது குற்றச்சாட்டு  எழுந்துள்ளது.  தென்கொரியாவைச் சேர்ந்த ஒரு 

சூரியசக்தி  மின்சார  நிறுவனத்தின்  ஊழியர்கள்  போல, சண்டே  டைம்ஸ் செய்தியாளர்கள்,  தொழிலாளர்  கட்சியைச் சேர்ந்த  பிரியன் மக்கன்ஜி மற்றும்  ஜேக் கன்னிங்ஹம் ஆகிய  2 எம்.பி.க்களையும் அணுகி,  தங்கள்  நிறுவனத்துக்கு   ஆதரவாக  சில பணிகளை செய்து  தருமாறு  கேட்டு உள்ளனர். இதற்காக,  ஆண்டுக்கு 1.44 லட்சம்  பவுண்டு கேட்டதாகத் தெரிகிறது.  இது போல,   உல்ஸ்டர் யூனியனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  ஜான் லேர்டு  நாடாளுமன்றத்தில்   கேள்வி கேட்பதற்காக மாதத்துக்கு  2,000 பவுண்டு  கேட்டுள்ளார்.   இவை அனைத்தையும் பதிவு செய்து 

கொண்ட செய்தியாளர்கள்   இது குறித்து  செய்தி  வெளியிட்டுள்ளதால் பிரிட்டனில்  பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.   ஃபிஜியைச் சேர்ந்த  நிறுவனத்துக்கு ஆதரவாக  செயல்படுவதற்காக  4,000 பவுண்டுகள் லஞ்சமாக  பெற்றதாக  பழமைவாத கட்சி  எம்.பி. பாட்ரிக்  மெர்சர் மீது  பிபிசி  குற்றம் சாட்டியதையடுத்து,   அவர் வெள்ளிக்கிழமை  தனது  பதவியை  ராஜினாமா  செய்தார்.  ஆனால் தங்கள்  மீதான  குற்றச்சாட்டுகளை  அரசியல்வாதிகள்  மறுத்துள்ளனர்.  சுயலாபத்துக்காக தங்கள் பதவியைப் பயன்படுத்த பிரிட்டன் எம்.பி.க்களுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்