முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவி விலகும்படி யாரும் கேட்கவில்லை: என்.சீனிவாசன்

திங்கட்கிழமை, 3 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.4 - இந்திய கிரிக்கெட் வாரியத்தலைவர் பதவியிலிருந்து விலகும்படி யாரும் என்னை நிர்பந்திக்கவில்லை என்று வாரிய தலைவராக இருந்த சீனிவாசன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் என்.சீனிவாசன் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

செயற்குழு விவாதங்கள் முடிவில் கிரிக்கெட் சூதாட்ட விசாரணை முடியும் வரை கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து நான் ஒதுங்கி இருப்பேன் என்று அறிவித்தேன். அந்த காலகட்டத்தில் கிரிக்கெட் வாரியம் இயங்க வேண்டும் என்பதால் அந்த பணியை கவனிக்கும்படி டால்மியாவை கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

செயற்குழுவில் என்னை பதவி விலகும்படி எந்த உறுப்பினரும் கேட்கவில்லை. கிரிக்கெட் வாரிய செயலாளர் மற்றும் பொருளாளர் பதவியில் இருந்து விலகிய சஞ்சய் ஜக்தாலே, அஜய் ஷிர்கே, ஐ.பி.எல். சேர்மன் பதவியில் இருந்து விலகிய ராஜீவ்சுக்லா ஆகியோர் தங்கள் பதவியில் தொடர வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.

அவர்கள்  பதவிக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன். செயற்குழு கூட்டத்தில் என்னை பதவி விலகும் படி பிந்த்ரா கோரவில்லை. கூட்டம் சுமூகமாக நடந்தது. யாரும் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்கொண்டுள்ள சவால்களை சமாளிக்க ஊக்கம் அளிக்கும் வகையில் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

அஜய் ஷிர்கேவின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஷிர்கே, ஜக்தாலே திரும்ப வேண்டும் என்பது எங்களின் ஒருமித்த முடிவாகும். ஷிர்கே எனது சிறந்த நண்பர்.

அவரும், ஜக்தாலேவும்  திரும்புவார்கள். சூதாட்ட விசாரணை முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து நான் ஒதுங்கி இருப்பேன். எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் கிடையாது.

இவ்வாறு என்.சீனிவாசன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்