முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன்: நடால் - ஜோகோவிக் காலிறுதிக்கு முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், ஜூன். 5 - பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி யில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக நம்பர் - 1 வீரரான நோவக் ஜோகோவி க் மற்றும் ரபேல் நடால் இருவரும் 4-வது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். மகளிருக்கான இரட்டையர் பிரிவில் 2 - வது சுற்றில் சானியா மிர்சா மற்றும் மேடக் ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. 

இந்த வருடத்தின் 2 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பிரான்ஸ் நாட்டின் தலைந கரான பாரிசில் கடந்த ஒரு வார கால மாக வெகு விமர்சையாக நடந்து வரு கிறது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்க னைகள் களத்தில் குதித்து உள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகி ழ்வித்து வருகின்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 4-வ து சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதி ல் செர்பிய நட்சத்திர வீரரான ஜோ கோவிக்கும், ஜெர்மனியைச் சேர்ந்த இளம் வீரரும் மோதினர். 

4 செட் கொண்ட இந்த ஆட்டத்தின் முடிவில் அனுபவம் வாய்ந்த செர்பிய வீரர் சிறப்பாக ஆடி 4 -6,6 -3, 6 -4, 6 -4 என்ற செட் கணக்கில் ஹொல்ஸ்கிரை பரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். 

மற்றொரு 4 -வது சுற்று ஆட்டம் ஒன்றி ல் ஸ்பெயின் முன்னணி வீரரான ரபேல் நடாலும், ஜப்பானைச் சேர்ந்த இளம் வீரரான நிஷிகோரியும் மோதினர். 

இதில் முன்னாள் நம்பர் -1 வீரரான நடால் வெகு நேர்த்தியாக ஆடி 6-4, 6-1  6-3 என்ற செட் கணக்கில் நிஷிகோரி யை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.  

மற்ற ஆட்டங்களில் ஜெர்மனி வீரர் டோமி ஹாஸ், சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றி ல் ரஷ்ய நட்சத்திர வீராங்கனையான மரியா ஷரபோவாவும், அமெரிக்க வீராங்கனையும் மோதினர். இதில் விம்பிள்டன் முன்னாள் சாம்பியனான மரியா அபாரமாக ஆடி 6 -4, 6 -3 என்ற செட் கணக்கில் சோலனி ஸ்டீபன் சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு ஆட்டம் ஒன்றில், பெலார ஸ் வீராங்கனை அசரென்கா 6 -3, 6 -0 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங் கனை ஷிவ்நோவை வென்றார். 

ரஷ்யாவின் முன்னணி வீராங்கனைகளி ல் ஒருவரான கிரிலென்கோ 7 -5, 6 -4 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரா ங்கனை பெத்தானி மேடக்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். 

மகளிருக்கான இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சானியா       மிர்சா மற்றும் பெத்தானி மேடக் ஜோ டியும் அமெரிக்க ஜோடியும் மோதின. 

இதில் இந்திய மற்றும் அமெரிக்க ஜோ டி கடும் போராட்டத்திற்குப் பின் 1-6, 6-3, 6 -0 என்ற செட் கணக்கில் மவுல்டன் லெவி மற்றும் டேவிஸ் இணையை வீழ்த்தி 3 -வது சுற்றுக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்