முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்டம்: மெய்யப்பன் - விண்டுக்கு நிபந்தனை ஜாமீன்

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஙீஜூன். 5 - ஐ.பி.எல். சூதாட்ட புகாரில் சிக்கி கைதான சென்னை சூப்பர் கிங்ஸ் குருநாத் மெய்யப்பன் மற்றும் பாலிவுட் நடிகர் விண்டூவுக்கு மும்பை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பாலிவுட் நடிகர் விண்டு தாராசிங் பந்தயத்தில் ஈ்டுபட்டது தெரியவந்தது. விண்டுவை கைது செய்த போலீசார், விண்டு மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பனும் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈ்டுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து அவரை மும்பை போலீசார் கடந்த 23 ம் தேதி கைது செய்தனர். குருநாத் மெய்யப்பனின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 14 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆர்தர் ரோட்டில் உள்ள சிறைக்கு அவரை போலீசார் கொண்டு சென்றனர். 

இந்த நிலையில் குருநாத் மெய்யப்பன், விண்டு ஆகியோர் மும்பை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குருநாத் மெய்யப்பன் மற்றும் விண்டு தாராசிங் ஆகியோர் 25 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தியும் வெளிநாட்டிற்கு செல்லக் கூடாது என்றும் கூறி ஜாமீனில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார். வாரம் இருமுறை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தன்னை ஜாமீனில் விடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்து விட்டது. மேலும் வருகிற 18 ம் தேதி வரை அவரை காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் ஸ்ரீசாந்த் மீது பல கடுமையான பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago