முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம்

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மே.- 2 - சிறப்பாக பணிபுரிந்த 11 சி.பி.ஐ அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் போலீஸ் பதக்கம் வழங்கப்பட்டது.  சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ம் தேதி 2009, 2010 மற்றும் குடியரசு தினமான ஜனவரி 26 ம் தேதி 2010 ல் இந்த 11 அதிகாரிகளும் குடியரசு தலைவர் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது இவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 11 சி.பி.ஐ அதிகாரிகளுக்கும் குடியரசு தலைவர் பதக்கத்தை பிரதமர் மன்மோகன்சிங் வழங்கினார். போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. இணை இயக்குனர் கல்ஹோத்ரா, ஆருஷி கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. இணை இயக்குனர் அருண்குமார், ஊழல் வழக்கில் பூடாசிங்கின் மகனை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரி ரிஷி ராஜ்சிங்  ஆகியோர் குடியரசு தலைவர் பதக்கம் பெற்றவர்களில் முக்கியமானவர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்