முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லு வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்கிறேன்: நிதீஷ்

வியாழக்கிழமை, 6 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

பாட்னா, ஜூன். 7 - பீகார் இடைத் தேர்தலில் லல்லு பிரசாத் யாதவ் ஜெயித்து விட்டார். நான் அதை அமைதியாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார். பீகார் மாநிலம் மகாராஜ்கன்ச் லோக்சபா இடைத் தேர்தலில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் பெரும் தோல்வியைச் சந்தித்தது நிதீஷை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தேர்தலில் நிதீஷின் அரசியல் எதிரியான லாலு பிரசாத் யாதவின் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிதீஷ் கூறுகையில், மிகவும் அடக்கமாக, அமைதியாக, லல்லு பிரசாத் யாதவ் வென்று விட்டார் என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றார். வேறு கருத்தை அவர் தெரிவிக்கவில்லை. நிதீஷ் கட்சியின் தோல்விக்கு நிதீஷின் அரசியல் அராஜகம்தான் காரணம் என பா.ஜ.க. வினர் கூறுகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஆட்சிக்கு வந்த பின்னர் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க. வை மதிப்பதில்லை நிதீஷ். பிரசாரத்துக்குக் கூட பா.ஜ.க. தலைவர்களை அவர் முறைப்படி கூப்பிடவில்லை. இந்த அராஜகப் போக்குதான் அவரது கட்சியின் படு தோல்விக்குக் காரணம் என்றனர் அவர்கள். அதேசமயம், மகாராஜ்கன்ச் தொகுதி எப்போதும் லல்லு கட்சிக்கு ஆதரவானது என்பதையும் நிதீஷ் குமார் சுட்டிக் காட்டத் தவறவில்லை.இதுகுறித்து அவர் கூறுகையில், அந்தத் தொகுதியில் எம்.பியாக இருந்தவர் எங்களது கட்சியைச் சேர்ந்தவரில்லை. அவர் லல்லு கட்சியைச் சேர்ந்தவர் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது என்றார் நிதீஷ். மேலும் அவர்கூறுகையில், இந்த தோல்வியால் பா.ஜ.க. வுடனான உறவிலோ, அல்லது கூட்டணியிலோ பாதிப்பு ஏதும் வராது, தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago