முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்டு - மெய்யப்பனுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை..!

வியாழக்கிழமை, 6 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூன். 7 - ஐ.பி.எல். போட்டிகளில் பெட்டிங்கில் ்ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நடிகர் விண்டு தாராசிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. குருநாத் மெய்யப்பன் மற்றும் 6 பேருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் ஜாமீன் மனுக்கள் மும்பையில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த கூடுதல் மாஜிஸ்திரேட் எம்.என். சலீம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. குருநாத் மெய்யப்பன், நடிகர் விண்டு தாராசிங் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் தனது 11 பக்க ஜாமீன் உத்தரவில் கூறியிருப்பதாவது, 

விசாரணை நடத்தி ஆதாரங்களை சேமிக்க அரசு தரப்புக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் யார் போலியான ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. போலி ஆவண தயாரிப்பு அல்லது அதிகாரப்பூர்வ பதிவேட்டில் போலியான பதவி அல்லது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் போலியான பதிவு செய்து ஏமாற்று வேலை நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

மெய்பப்பன் வழக்கில் அவர் மேட்ச் பிக்ஸிங் அல்லது ஸ்பாட் பிக்ஸிங் செய்யவில்லை என்று வழக்கு தொடர்ந்தவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அவருக்கு வின்துவை தவிர வேறு யாரையும் தெரியவில்லை. மேலும் மெய்யப்பனுக்கு எந்த ஒரு கிரிக்கெட் வீரருடன் தொடர்பு உள்ளது என்று வாதி எங்கும் தெரிவிக்கவில்லை என்று மாஜிஸ்திரேட் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவூபுக்கு தரகர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது குறித்து மாஜிஸ்திரேட் கூறுகையில், அவருக்கு டி-சர்ட், ஷூ ஆகியவை பரிசாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை தவிர விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. அந்த நடுவர் மூலம் மேட்ச் பிக்ஸிங்கிற்கு ஏற்பாடு செய்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்