முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க தேர்தல்: துணை ராணுவத்தை அனுப்ப மறுப்பு

வியாழக்கிழமை, 6 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூன்.7 - மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு பாதுகாப்புக்காக துணை ராணுவத்தை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தலை 3 கட்டமாக நடத்த வேண்டும் என்றும், மத்திய அரசின் துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. இதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தன்னிச்சையாக தேர்தல் தேதியை அறிவித்தது. இதை எதிர்த்து ஐதோர்ட்டில் தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்தது. 

தேர்தல் ஆணையத்துடன் கலந்து பேசி தேர்தலை நடத்துமாறு ஐகோர்ட் கூறியது. இதையடுத்து தேர்தல் ஆணையம் விரும்பியபடி 3 கட்டமாக தேர்தலை நடத்த அரசு அறிவிப்பு வெளியிட்டது. தேர்தலுக்காக மத்திய துணை ராணுவத்தை அனுப்புமாறு  மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சக இயக்குநர் தினேஷ் மாத்தூர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு  அளிக்க  முடியாது என்று அவர் கடிதம் எழுதியுள்ளார். இதை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் விருப்பப்படி அண்டை மாநில ஆயுதப்படை போலீஸாரின் பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும் மம்தா தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்