முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் தாயார் காலமானார்

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.8 -   மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார்  சென்னையில் காலமானார். மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் தாயார் லட்சுமி ஆச்சி பட்டினப்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

லட்சுமி ஆச்சி மரணம் அடைந்த தகவல் மும்பையில் இருந்த ப.சிதம்பரத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக விமானம் மூலம் புறப்பட்டு நேற்று  காலை சென்னை வந்து தாயார் உடலை பார்த்து கண்கலங்கினார். ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், தொழில் அதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், பட்டுக்கோட்டை என். ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கு.செல்வப் பெருந்தகை, பல்லாவரம், ஆர்.எஸ்.செந்தில்குமார், வி.எஸ்.ஜெ.தினகரன், மாணவர் காங்கிரஸ் யஷ் வந்த்சாகர், ஏ.ஆர்.எம். கோவிந்தராஜ் உள்பட ஏராளமான பிரமுகர்கள், உறவினர்கள் லட்சுமி ஆச்சி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

லட்சுமி ஆச்சி உடல் தகனம் மயிலாப்புர்ை இடுகாட்டில்நேற்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. லட்சுமி ஆச்சி தனது கண்களை தானம் செய்ய ஏற்கனவே பதிவு செய்திருந்தார். அதன்படி சங்கர நேத்ராலயா ஆஸ்பத்திரிக்கு அவரது 2 கண்களும் தானம் செய்யப்பட்டது. லட்சுமி ஆச்சிக்கு லட்சுமணன், ப.சிதம்பரம் ஆகிய 2 மகன்களும், உமா நாராயணன் என்ற மகளும் உள்ளனர். அண்ணாமலை என்ற மகன் சில வருங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago