முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சல் பகுதிகளில் பணியாற்று பவர்களுக்கு சிறப்பு படி

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

ராய்ப்பூர்,ஜூன்.8 - நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு  25 சதவீதம் அலவன்ஸ் மற்றும் ரூ.10 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் வழ்ங்குவது குறித்து சட்டீஸ்கர் அரசு பரிசீலனை செய்து வருகிறது. சட்டீஸ்கள் மாநிலத்தில் நக்சல் பிரச்சினை அதிகமாக உள்ளது. கடந்த மாதம் பஸ்தர் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் 3 பேர் உட்பட அக்கட்சியை சேர்ந்த 30 பேரை நக்சல்க்ள் சுட்டுக்கொன்றனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நக்சல் பகுதி குறித்து விவாதிக்க முதல்வர் ராமன்சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியது. அப்பகுதிகளில் வளர்ச்சி பணிகளை முடுக்கிவிடுதல் அந்த பகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன. நக்சல் பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. இதை முதல்வர் ராமன்சிங் ஏற்றுக்கொண்டார். நக்சல் பகுதிகளுக்கு அரசு ஊழியர்கள் அடிப்படை சம்பளத்தில் 25 சதவீதம் சிறப்பு அலவன்ஸ் வழங்கவும், ரூ.10 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் வழங்கவும் மாநில அரசு முன் வந்துள்ளது. இந்த திட்டம குறித்து ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க மாநில கூடுதல்  தலைமை செயலர், பொது நிர்வாக துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள்து. இந்த குழுவின் அறிக்கை கிடைத்தவுடன்  திட்டம்  அமல்படுத்தப்படும் என சட்டீஸ்கர் அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்