பிலடெல்பியா, ஜூன். 8 - அமெரிக்காவின் பிலடெல்பியாவில் திடீரென 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக நகர மேயர் மைக்கேல் நட்டர் கூறியதாவது, அடுக்கு மாடி கட்டிடம் திடீரென இடிந்து அதன் அருகே இருந்த கடைகள் மீது விழுந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். கடைக்குள் எத்தனை பேர் இருந்தனர் எனத் தெரியவில்லை. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்றார். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. இடிந்த கட்டிடம் காலியாக இருந்தது. இதற்கு முன்பு அங்கு கடைகள், வீடுகள் இருந்தன.