வாஷிங்டன், ஜூன். 8 - அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சூசன் ரைஸை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார்.
ஐ.நா. சபையின் அமெரிக்க தூதராக இருந்த சூசன் ரைஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே பதவியில் இருந்த டாம் டோனிலன் பதவி விலகியதை அடுத்து சூசன் ரைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.