ரமல்லா, ஜூன். 8 - பாலஸ்தீன புதிய பிரதமராக கல்வியாளர் ரமிஹம்தல்லா பொறுப்பேற்றுக் கொண்டார்.
ரமல்லா நகரில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் முகமது அப்பாஸ் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய அரசில் 24 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். நிதித்துறைக்கான பொறுப்பு தொடர்பாக முன்னாள் பிரதமர் சலாம் பயதுக்கும், அதிபருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 13 ம் தேதி பயது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.