வீட்டை தோளில் சுமந்துசெல்லும் சீன மனிதர்..!

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

ஹாங்காங், ஜூன். 8 - சீனா, ஹாங்காங்க்கில் வசிக்கும் ஒரு மனிதர் தனது 60 கிலோ வீட்டை, தான் போகும் இடங்களுக்கெல்லாம் தோளில் தூக்கிச் செல்கிறாராம். இதுவரை இவர் கடந்த மொத்தத் தொலைவு கிட்டத்தட்ட 435 கிலோமீட்டராம். 

சீனாவில் உள்ள குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்தவர் லியூ லிங்சாவோ. இவர் மூங்கில்கள் மற்றும் பொலிதீனினால் உருவாக்கிய தனது வீட்டை தோளில் சுமந்தே ஊர் சுற்றுகிறாராம். இந்த பாலிதீன் மூங்கில் வீட்டின் எடை கிட்டத்தட்ட 60 கிலோ. தூக்கிச் சுற்றும் லியூவின் வயதோ 38. தன் வித்தியாசமான வீடு குறித்து லியூ கூறும்போது, நான் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் தங்குமிட பிரச்சினை எனக்கில்லை நான் சுதந்திரமானவனாக உள்ளேன் என்கிறார்.

ஆனால், இந்த வீட்டிலும் ஒரு குறைபாடு உள்ளதாம். அதாவது சுமார் ஒரு வருட காலம் மட்டுமே இவ்வீட்டை பயன்படுத்த முடியுமாம். இதுவரை 435 கிமீ சுற்றியுள்ள லியூ, தற்போது பயன் படுத்துவது மூன்றாவது மூங்கில் வீடாம். லியூ நடந்து செல்லும் போது, வழியில் கிடைக்கும் பிளாஸ்டிக் முதலான குப்பைகளை பொறுக்கி, அவற்றை விற்று வருமானம் பார்த்து வருமானம் ்ஈட்டிக் கொள்கிறார். இதன் மூலம் சுற்றுச்சூழலும் தூய்மையாவதில் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: