முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.ஜ. கூட்டணிக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்: பாரிக்கர்

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

பனாஜி,ஜூன்.8 - மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலருவதற்காக நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள் என்று கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். கோவா மாநிலத்தின் பனாஜியில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டம் தொடங்குகிறது. முன்னதாக நேற்று கட்சி அலுவலக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. இதில் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டதாக தெரிகிறது. மேலும் இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரக்குழு தலைவராக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் முதல் நாள் கூட்டத்தை எல்.கே. அத்வானி புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க நாட்டு மக்களும் கட்சி தொண்டர்களும் விரும்புகிறார்கள் என்று கட்சியின் தேசிய துணைத்தலைவர் இரானியும் பேட்டி அளித்துள்ளார். 

இந்தநிலையில் தேசிய செயற்குழு கூட்டத்தை ஏற்று நடத்தும் கோவா மாநில பாரதிய ஜனதா முதல்வர் மனோகர் பாரிக்கரும் நேற்று தனது பேக்ஸ்புக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மத்தியில் பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மீண்டும் அமைவதற்காக நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள். நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. இதை போக்கி நல்லாட்சி அமைய வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர். லோக்சபை தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள்தான் உள்ளது. இந்த நேரத்தில் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கூட்டத்தில் லோக்சபை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றிபெறுவதற்கான யுக்திகள் வகுக்கப்படும். கூட்டத்தில் கலந்துகொள்ளும் கட்சியின் அனைத்து மட்ட  தலைவர்களையும் நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்  இவ்வாறு அந்த அறிக்கையில் பாரிக்கர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்