முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் கோப்பை: மே.இ.தீவு பாகிஸ்தானை வீழ்த்தியது

சனிக்கிழமை, 8 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 9 - ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மே.இ.தீவு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. மே.இ.தீவு அணி தரப்பில், துவக்க வீரர் கெய்ல், சாமுவேல்ஸ், மற்றும் பொல் லார்டு ஆகியோர் நன்குஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு பக்கபலமாக, கேப் டன் ஜே . பிராவோ, கீப்பர் ராம்டின், நரீன் மற்றும் சார்லஸ் ஆகியோர் ஆடி னர். 

முன்னதாக ரோச் மற்றும் நரீன் இருவ ரும் சிறப்பாக பந்து வீசி 6 முக்கிய விக் கெட்டைக் கைப்பற்றினர். அவர்களுக் கு ஆதரவாக, ராம்பால், ஜே. பிரா வோ ஆகியோர் பந்து வீசினர். 

சாம்பியன்ஸ் கோப்பையில் குரூப் பி சார்பில் 2- வது லீக் ஆட்டம் லண்டனி ல் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதா  னத்தில் நடந்தது. இதில் பாகிஸ்தான் மற்றும் மே.இ. தீவு அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி ரன் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி48 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டை யும் இழந்து 170 ரன்னை எடுத்தது. 

பாகிஸ்தான் அணி தரப்பில், கேப்டன் மிஸ்பா உல் ஹக் அதிகபட்சமாக, 127 பந்தில் 96 ரன்னை எடுத்து இறுதிவை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். 

நசீர் ஜாம்ஷெட் 93 பந்தில் 50 ரன் எடுத் தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்க எண்ணைத் தொடவில்லை. 

மே.இ.தீவு அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ரோச் 38 ரன் னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். சுனில் நரீன் 34 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். தவிர, ஜே. பிரா வோ மற்றும் ராம்பால் இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி 171 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி வைத்தது . அடுத்து களம் இறங்கிய அந்த அணி 40.4 ஓவரில் 8 விக்கெட்இழப்பிற்கு 172 ரன்னை எடு த்தது.

இதனால் இந்த லீக் ஆட்டத்தில் மே.இ.தீவு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. 

மே.இ.தீவு அணி தரப்பில் துவக்க வீரர் கிறிஸ் கெய்ல் அதிகபட்சமாக 47 பந்தி ல் 39 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். 

சாமுவேல்ஸ் 57 பந்தில் 30 ரன் எடுத் தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். பொல்லார்டு 58 பந்தில் 30 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அட க்கம். தவிர, கேப்டன் ஜே. பிராவோ 19 ரன்னையும், கீப்பர் ராம்டின் மற்றும் நரீன் தலா 11 ரன்னையும் எடுத்தனர். 

பாகிஸ்தான் அணி சார்பில், மொகமது இர்பான் 32 ரன்னைக் கொடுத்து 3 விக் கெட் எடுத்தார். தவிர, சயீத் அஜ்மல் மற்றும் வகாப் ரியாஸ் தலா 2 விக்கெ ட்டும், மொகமது இர்பான் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ரோச் தேர்வு செய்ய ப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்