பாக். அதிபர் சர்தாரியின் நண்பர் மகனுக்கு மரண தண்டனை

சனிக்கிழமை, 8 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

கராச்சி, ஜூன். 9 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மிக நெருங்கிய நண்பர் சிகந்தர் ஜடோய். தொழில் அதிபரான இவரது மகன் ஷாருக் ஜடோய். கடந்த ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி கராச்சி அப்மார்க்கெட் பகுதியில் ஷாசெப்கான் என்பவரை ஷாருக்டோய் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். திருமண வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய அவரது தங்கையை ஷாசெப்கானின் வேலைக்காரர் கிண்டல் செய்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்தது. 

ஆனால் இது தொடர்பாக ஷாருக் ஜடோய் மீது போலீசார் வழக்கு தொடரவில்லை. இதையடுத்து அவர் துபாய்க்கு தப்பி சென்று விட்டார். ஆனால் இதை எதிர்த்து ஷெகாய்கானின் உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தினர். எனவே சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதில் தலையிட்டு வழக்கை பதிவு செய்யும்படி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதை தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் நீதிபதி குலாம்மேமன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் தொழிலதிபரின் மகன் ஷாருக் ஜடோய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த கிராஜ்தல்பூர், சாஜித்தல்பூர், முர்ட்ஷா லஸ்ஸார் ஆகிய 3 பேருக்கு தலா 25 ஆண்டு ஜெயில் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: