பேருந்தில் திடீர் தீ: 47 பேர் உடல் கருகி பலி!

சனிக்கிழமை, 8 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், ஜூன். 9 - சீனாவின் ஸியாமென் நகரத்தில் பயணிகளுடன் சென்ற பேருந்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதில் 47 பேர் உயிரோடு கருகினர். சீனாவின் தென்கிழக்கு நகரமான ஸியாமென் துறைமுக நகரத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது. பேருந்தில் இருந்து பயணிகள் தப்பிக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை. பேருந்தில் இருந்த 47 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவத்தில் 34 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓடும் பேருந்தில் திடீரென தீ எப்படி பற்றி எரிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பேருந்துக்கு திட்டமிட்டே தீ வைக்கப்பட்டது பற்றிய சதித் திட்டம் அம்பலமாகியுள்ளது. எதற்காக இந்த தீ வைப்புச் சம்பவம் நடத்தப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு சீனாவில் கோழி இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: