முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் புகார் மீது வழக்கு பதிவு செய்யாவிடில் தண்டனை

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.10 - பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்தால் போலீசார்ருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் போலீசார் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிப்பில் போலீசார் எல்லைப்பிரச்சினையால் மெத்தனமாக செயல்பட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்ய மறுத்ததுடன் விசாரணை தொடங்குவதிலும் தாமதம் செய்யப்பட்டது. பொதுமக்கள் போராட்டத்துக்கு பின் போலீஸ் துறை சுறுசுறுப்பானது. அதன் பிறகு மார்ச் மாதம் கிழக்கு டெல்லியில் 5 வய்து சிறுமி கற்பழிக்கப்பட்டபோதும் போலீசார் வழ்க்கு பதிவு செய்யாமல் பெற்றோரை அலைக்கழித்தனர். சிறுமி உடல் நிலை மோசமாகி  ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகுதான் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. 

இது போல் கற்பழிப்பு, விபத்து உள்ளிட்ட காலங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக மனித உரிமைகள் அமைப்புகளும் புகார் தெரிவித்தன. இதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை நடத்தியது. ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்டது ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதுதான் தகவலை பெற்றுக்கொண்டதற்கான ஆதாரம் ஆகும் என்று சட்டம சொல்கிறது. எனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரு உத்தரவு அனுப்பி உள்ளது. அதில் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்கள் மீது போலீசார் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும். அவ்வாறு செய்யாவிடில் அது ஒரு ஆண்டு ஜெயில் தண்டனைக்குரிய குற்றம் என தெரிவித்துள்ளது. 

இதேபோல் குற்றம் நடந்தது வேறு இடமாக இருந்தாலும் அது தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதி அல்ல என்று கூறி மனுவை நிராகரிக்கக்கூடாது. புகார் மீது ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்து அதை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுபப்பி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. எப்.ஐ.ஆர் போடுவதில் தாமதம் ஏற்பட்டால் அது பாதக்கப்பட்டவர்களுக்கு மேலும் அவதி ஏற்படுத்துவதுடன் குற்றவாளிகள் தப்பிக்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே மாநில அரசுகள் இதை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்