முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

பனாசி,ஜூன்.10 - மன்மோகன்சிங் அரசின் ஊழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. வரும் 17 முதல் 22 தேதி வரை நாடு தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளது. கோவா மாநிலத்தில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் மேலிட பிரதிநிதி ஷா நவாஸ் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதவாது, 

ஐக்கிய முற்போக்கு கூடடணி அரசு  இந்த நாட்டுக்கு பெரும் சேதத்தைஏற்படுத்தி விட்டது. அதுமட்டுமல்ல.ஊழலை கட்டுப்படுத்தவும் தவறி விட்டது. விலைவாசி உயர்வை தடுக்கவும் தவறிவிட்டது. எல்லா வழிகளிலும் இந்தஅரசு தோல்வி அடைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 17ம் தேதி முதல் 22ம் தேதிவரை நாடு தழுவியஅளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.முன்னதாக இந்த போராட்டத்தை  மே27-ம் தேதியே நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் மே25ம் தேதி சத்தீஸ்கரில் நகசல் தீவிரவாதிகள் தாக்கியதில் பலர் பலியானதை தொடர்ந்து எங்கள் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. எனவேகாங்கிரஸ் ஆட்சியின் ஊழலை எதிர்த்து போராட்டம்  நடத்த இப்போது முடிவு செய்துள்ளோம்.

    ஐக்கிய முற்போக்குகூட்டணியின் நான்கு ஆண்டு கால  ஆட்சி இந்திய வரலாற்று அத்தியாயத்தில் ஒரு கரும்புள்ளி ஆகும். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. காங்கிரஸ்அரசு எல்லா வகையிலும் தோற்றுவிட்டது. ஆனால் இவர்கள் நான்காண்டு ஆட்சி என்று கொண்டாடுகிறார்கள். அதை கொண்டாட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. அதிகார போட்டியால் ஜனநாயகமே சீரழிந்து விட்டது. காங்கிரசின் தவறான ஆட்சியிலிருந்து நிவாரணம் தேட விரும்புகிறார்கள் நாட்டு மக்கள். முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது. இரட்டை அதிகார மையம் மத்தியில் நிலவுகிறது. ஒருபக்கம் மன்மோகன் சிங் அமைச்சரவை. மற்றொரு பக்கம் சோனியாகாந்தி அமைச்சரவை. இதை இந்த நாடு இனியும் சகித்து கொள்ளாது. இந்த நாட்டை இருட்டில் இருந்து மீட்க பா.ஜ.க.வால் தான் முடியும். இவ்வாறு ஷாநவாஸ் உசேன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்