முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் டெல்லி செல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.10 - திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று டெல்லி செல்கிறார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நாளை காலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியை சந்தித்து பேசுகிறார்.

அப்போது 2013-2014-ம் ஆண்டுக்கான தமிழக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி பேச்சு நடத்துகிறார். இன்று மாலையே சென்னை திரும்புகிறார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்