முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஜ்பாய் சிகிச்சை: செலவை வெளியிடக் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.10 - முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சிகிச்சை அளிக்க எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது என்று அறிவிக்குமாறு சுகாதார  அமைச்சகத்தை மத்திய தகவல் குழு கேட்டுக்கொண்டுள்ளது. 88 வயதான வாஜ்பாய்க்கு எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய விரும்புவதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த மத்திய தகவல் குழுவின் தலைவர் சத்யானந்தா மிஸ்ரா கூறியதாவது:

வாஜ்பாய்க்கு அளிக்கும் சிகிச்சைக்காக ஆன செலவை தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளேன். இது தொடர்பாக வரும் மனுவை சுகாதார அமைச்சகம் கண்டுகொள்வதே இல்லை. இது தொடர்பான தகவலை அளிக்க அந்த அமைச்சகம் விரும்பவில்லை. இந்த மனு ஒரு துறையிலிருந்கது மற்றொரு துறைக்கு மாற்றப்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக என்ன தகவல் கிடைத்தாலும் அதைத் தெரிவிக்க வேண்டும்.  

பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவலைப் பெற்றுத் தருமாறு மொரதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளதால் சிகிச்சைக்கான செலவு விவரத்தைத் தெரிவிக்க வேண்டும். இதுபற்றி அவர் விடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து அவர் தகவல்  குழுவை நாடியுள்ளார்.

மிக முக்கியமானவர்களுக்கு ஆகும் செலவை உடனடியாகத் தர வேண்டும். இதற்கான செலவை அந்தந்த மாநில நிதி அமைச்சகம் ஏற்றுக்கொள்கிறது என்று இதை நியாயப்படுத்தியுள்ளார் இதன்  தலைவர் வஜாகத் ஹபிபுல்லா. நிதி அமைச்சகத்தின் கணக்கிலிருந்து இந்தப் பணம் செலவு செய்யப்படுவதால் இந்த செலவு விவரத்தை தெரிவித்தல் அவசியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். 1996, 1998-99, 1999-2004 வரை பிரதமராக வாஜ்பாய் இருந்துள்ளார்.  அப்போது அந்தக் காலகட்டத்தில் அவருக்கு மூட்டு மாற்றம் உள்ளிட்ட பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்