முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பொருளாதாரம் மீண்டெழும்: ஜனாதிபதி

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

இந்தூர், ஜூன். 10 - பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள இந்திய பொருளாதாரம் அவற்றில் இருந்து மீண்டெழும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஐ.ஐ.டி.யின் முதல் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது, 

சமீப காலத்தில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் மக்கள் பீதியடைய தேவையில்லை. இந்திய பொருளாதாரம் நிச்சயமாக மீண்டெழும். அமைச்சராக பல ஆண்டு காலம் பணியாற்றியதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் நன்மையை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன். எனவேதான் இப்போதைய நிலையை கண்டு ஏமாற்றமடையவில்லை. 

2012 -13 ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உள்ளது. இது நமக்கு கவலையளிக்கும் விஷயம்தான். ஆனால் இதற்காக நாம் பீதியடைய தேவையில்லை. முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகவே இருந்தது. 1980 ம் ஆண்டுகளில் இது 5.5 சதவீதத்தை எட்டியது. கடைசி 10 ஆண்டுகளில் 7.9 சதவீத வளர்ச்சியை எட்டியது. இதே காலக்கட்டத்தில் சீனா தவிர வேறு எந்த நாடும் 7.9 சதவீத வளர்ச்சியை எட்டவில்லை. உலக பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை இந்தியா இப்போதுதான் சந்தித்துள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்