முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை கவலைக்கிடம்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், ஜூன்.10 - மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவரது நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுநோய் காரணமாக அவர் அவதிப்பட்டு வருகிறார்.  

94 வயதான மண்டேலாவின் உடல்நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும் கூட அவரது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஜோகன்ஸ்பர்க் நகரிலுள்ள அவரது இல்லத்தில் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவரை பிரிடோரியா மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கு முன்பு அவரது உடல்நிலை பாதிப்படைந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைபெற்று வந்தார். பின்னர் ஏப்ரல் மாதம் 6-ம்தேதி அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

   கடந்த 7 மாதங்களில் இவர் 3-வது முறையாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அடுத்த மாதம் அவரது 95-வது பிறந்த நாள் வருகிறது. லண்டன் செல்லவிருந்த அவரது மனைவி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு கணவர் அருகிலேயே உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்