முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: காங். பதில்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 10  - பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கிற்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது. பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் பேசிய ராஜ்நாத்சிங், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டை சுட்டிக்காட்டி மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி கூறும் போது, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் கூறும் அளவுக்கு இப்போது என்ன நடந்து விட்டது. அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வினர் வெற்றி பெற்று பிரதமர் பதவியை எட்ட வாய்ப்பே இல்லை. 

இந்த சூழ்நிலையில் பிரதமரை பதவி விலக வைத்து அவர்கள் என்ன சாதித்து விடப் போகிறார்கள். எதிர்மறையான பேச்சுக்களை தவிர வேறு எதுவும் பா.ஜ.க.வில் இருக்கப் போவதில்லை. கர்நாடகத்தில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததற்கு அக்கட்சியின் அமைச்சர்கள் செய்த ஊழல்கள்தான் காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கொள்கைகள், கோட்பாடுகளை பற்றி அவர்கள் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago