முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் விமான செலவு 9 ஆண்டுகளில் ரூ.642 கோடி!

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூன். 10 - பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 9 வருடங்களில் விமான பயணத்துக்காக மட்டும் ரூ. 642 கோடி அரசுப் பணத்தை செலவிட்டுள்ளார். பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்காக இந்த அளவுக்கு செலவாகியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் சரத்துப்படி பிரதமர் அலுவலகத்தால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை 67 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். 2004 ம் ஆண்டு முதல் முறையாக பிரதமர் பதவிக்கு வந்தது முதல் இந்த வெளிநாட்டுப் பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளார். 5 பயணங்களுக்கு பில் வரவில்லை. இதில் ஐந்து பயணங்கள் தொடர்பான பில் விவரம் பெறப்படவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த செலவானது விமான பயணங்களுக்கான செலவு மட்டுமே. மீதியுள்ள 62 விமான பயணங்களுக்கான செலவு ரூ. 642.45 கோடி என தெரியவந்துள்ளது. ரூ. 26.94 கோடி பிரதமர் மேற்கொண்ட பயணங்களில், அதிகம் செலவான தனிப்பட்ட பயணம் பிரேசில், மெக்ஸிகோவுக்கு அவர் 2012 ம் ஆண்டு போனதுதான். அந்த 7 நாள் பயணத்திற்கு மட்டும் ரூ. 26.94 கோடி செலவாகியுள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்