முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஹவாலா பணம் பரிமாற்றம்..!

திங்கட்கிழமை, 10 ஜூன் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.11 - ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1000 கோடி ஹவாலா பணம் பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்க பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தீவிரவாதிகள் இதில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதும் தெரியவந்துள்ளது. 

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த். அங்கித்சவான், ஆஜித்சண்டிலா, உட்பட 27 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். 

இது தவிர நாடெங்கும் நடந்த வேட்டையில் 60-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போட்டி முடிவுக்களுக்கு ஏற்ப ஹவாலா பண பரிமாற்றம் நடந்து இருப்பது தெரியவந்தது. பாகிஸ்தான், குவைத், துபாய் நாடுக்ளில் இருந்துதான் அதிகப்படியான பணபரிமாற்ற்ம் நடந்திருக்கிறது. இது பற்றி விசாரணை நடத்தி ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டிருப்பவர்களை கண்டுபிடித்து உதவும்படி அமலாக்கபபிரிவுக்கு டெல்லி போலீசார் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதையடுத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணையை துவக்கினர். முதல் கட்ட விசாரணையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1000 கோடி வரை ஹவாலா பண பரிமாற்றம் நடந்து இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். ஹவாலா பணம் தொடர்பாக ஆயிரக்கணக்கில் போன் உரையாடல்க்ள் நடந்துள்ளன. அவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பெரும்பாலான உரையாடல்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளை சென்றடைகிறது. இதன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் தீவிரவாதிகள் ரகசியமாக ஈடுபட்டு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்திருப்பது தெரிய வந்துள்ளது. 

மேலும் ஹவாலா பணத்தில் 90 விழுக்காடு கள்ள நோட்டுக்களாக வினியோகம் செய்யப்பட்டிருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்