முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரப்ஜித் சிங் இருந்த சிறையில் நீதிக் குழு விசாரணை

திங்கட்கிழமை, 10 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

லாகூர், ஜூன். 11  - பாகிஸ்தான்  சிறையில்  இந்தியர்  சரப்ஜித் சிங்  அடைக்கப்பட்டிருந்த  அறையை லாகூர் நீதிமன்றக்குழு  பார்வையிட்டு, கைதிகளிடம்  இச்சம்பவம்  குறித்து  விசாரணை நடத்தியது. 

குண்டு வெடிப்பு வழக்கு  ஒன்றில்  பாகிஸ்தானின்  லாகூர்  நகரில்  உள்ள  கோட் லக்பத் சிறையில் இந்தியரான சரப்ஜித் சிங் 20 ஆண்டுகளாக  தண்டனை அனுபவித்து வந்தார்.  இதனிடையே  சிறையில் உள்ள சக கைதிகள் சரப்ஜித் சிங்கை  கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி  கொடூரமான   முறையில்  தாக்கினர்.  இதில் படுகாயம் அடைந்து, கோமா நிலையில் இருந்த சரப்ஜித் சிங், லாகூரில்  உள்ள ஜின்னா மருத்துவமனையில்  மே 2 ஆம் தேதி  இறந்தார்.  இந்தப் படுகொலை  குறித்து விசாரிக்க லாகூர்  உயர்நீதிமன்றம்  நீதிக்குழுவை  அமைத்தது.  இந்தக் குழுவினர்,  கோட் லக்பத் சிறையை நேரில்  பார்வையிட்டது.  சரப் ஜித் சிங் குறித்த முழு ஆவணங்களையும் நீதிக் குழுவின்  தலைவர்  நீதிபதி  மசாஹர்  அலி அக்பர்  நக்வி,  சிறை  அதிகாரிகளிடம் சேகரித்துக் கொண்டார்.  மேலும்,  சரப்ஜித் சிங் மீது நடைபெற்ற  தாக்குதல்  தொடர்பாக  சில கைதிகளிடம் அவர் விசாரணை  நடத்தியதாக  லாகூர் உயர்நீதிமன்றத்தின் பதிவாளர்  புஷ்பா ஜமன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்