முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்று நடால் உலக சாதனை

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பாரீஸ், ஜூன்.11 - பிரெஞ்சு  ஓபன்  டென்னிஸ் போட்டியில்   ஸ்பெயினின்  ரஃபேல்  நடால்  8 - வது  முறையாக சாம்பியன்  பட்டம் வென்றார்.   பிரான்ஸ்   தலைநகர்   பாரீஸீல்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற  ஆடவர்  ஒற்றையர் இறுதிச்சுற்றில்   நடால் 6-3,6-2, 6 - 3 என்ற நேர் செட்களில்  சகநாட்டவரான  டேவிட்  ஃபெரரை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம், 16 நிமிடங்கள்  நடைபெற்றது.  இதன்மூலம்  டென்னிஸ் வரலாற்றில் ஒரே  கிராண்ட்ஸ்லாம்  போட்டியில், (பிரெஞ்சு ஓபன்)  அதிகமுறை  பட்டம் வென்றவர் என்ற உலக சாதனையை  படைத்தார் 27 வயதான  நடால். இதன்மூலம்  ஒட்டுமொத்தமாக  12​​- வது  கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள  நடால்,  அதிக கிராண்ட்ஸ்லாம்  பட்டங்கள்  வென்றவர்கள்  வரிசையில்  ஸ்விட்சர்லாந்தின்  ரோஜர்  ஃபெடரர்(17),  அமெரிக்காவின்  பீட் சாம்ப்ராஸ் (14) ஆகியோருக்கு  அடுத்தபடியாக  3 ​- வது  இடத்துக்கு  முன்னேறியுள்ளார். பிரெஞ்சு ஒபனில் 2005  - ம் ஆண்டு முதல்  பங்கேற்று  வரும் நடால், 2009  ​- ம் ஆண்டு தவிர

, மற்ற  8 முறையும்  பட்டம் வென்றுள்ளார்.  2009 - ல்  4 - வது  சுற்றில்  ஸ்விட்சரலாந்தின்  ராபின்  சோடர்லிங்கிடம்  தோல்வி  கண்டார் நடால்.  பிரெஞ்சு ஒபனில் இதுவரை  60 ஆட்டங்களில்  விளையாடியுள்ள நடால்,ஒன்றில்  மட்டுமே தோற்றுள்ளார். டேவிட்  

ஃபெரருடன் இதுவரை 24 ஆட்டங்களில்  மோதியுள்ள   நடால், 20 ​- ல் வெற்றி  கண்டுள்ளார்.  தற்போது  தொடர்ச்சியாக  9 முறை  ஃபெரரை  வீழ்த்தியுள்ளார் நடால். அதே நேரத்தில்  டேவிட் ஃபெரர்

தனது 31 வது  வயதில்தான்  முதல் முறையாக  கிராண்ட்ஸ்லாம் போட்டியின்  இறுதிச் சுற்றில்  விளையாடி உள்ளார்.  முழங்காலில்  ஏற்பட்ட காயம் காரணமாக  கடந்த  ஆண்டு நடைபெற்ற  ஒலிம்பிக்  மற்றும்  அமெரிக்க  ஓபன்,  ஆஸ்திரேலிய   ஓபன்  ஆகிய போட்டிகளில்  விளையாடும்  வாய்ப்பை  இழந்த நடால், 7 மாத ஓய்வுக்குப் பிறகு  கடந்த பிப்ரவரியில் மீண்டும்  டென்னிஸூக்கு திரும்பினார்.   அதன்பிறகு   9 டென்னிஸ்  தொடர்களில்  விளையாடிய    நடால்,  7 ​​- ல்  பட்டம் வென்றுள்ளார். 

ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன்,  அமெரிக்க ஓபன் ஆகிய நான்கும்  கிராண்ட்ஸ்லாம்  போட்டிகளாகும்.  இதில்  பிரெஞ்சு ஓபனில்   மட்டும் நடால் 8 முறை  பட்டம் வென்றுள்ளார். மற்ற 3 போட்டிகளில்  அதிகபட்சமாக  7 முறைக்கு  மேல் யாரும்  பட்டம் வென்றதில்லை.  விம்பிள்டன்  போட்டியில்  பிரிட்டனின் வில்லியம்  ரென்ஷா,  அமெரிக்காவின்  பீட் சாம்ப்ராஸ்,  ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் தலா 7 முறை பட்டம் வென்றுள்ளனர்.  அமெரிக்க ஓபன் போட்டியில் அமெரிக்காவின்  பில் லார்ன்ட்,பில் டில்டன்,  ரிச்சர்ட்  சியர்ஸ் ஆகியோர் தலா  7 முறை பட்டம் வென்றுள்ளனர். ஆஸ்திரேலிய  ஓபனில்  ஆஸ்திரேலியாவின்  ராய் எமர்சன் அதிகபட்சமாக 6 முறை பட்டம் 

வென்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்