நக்சல்களை சமாளிக்க கட்சிகள் ஓரணியில் திரள வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 12  - நக்சல்களை சமாளிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது, 

பழங்குடியினர் நலனுக்காக போராடுவதாக நக்சல்கள் கூறி வருவது வேடிக்கையாக உள்ளது. மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தொடர் அரசியல் நடவடிக்கை, வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் நக்சல்களுக்கு வலுவான பதிலடியை அளிக்கலாம். பாதுகாப்பு படையினர் போலீசார் தங்கள் பணியை நிறைவேற்றும் போது பழங்குடியினரின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு நக்சல்களை ஒடுக்க வேண்டும். 

நக்சல்களை ஒடுக்கும் பணியை மாநில அரசுகளே மேற்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து தர வேண்டும். மாவோயிஸ்டுகள் சிந்தாத்தத்தை இந்தியா ஒரு போதும் ஏற்காது. வன்முறை மூலம் நாடாளுமன்ற ஜனநாயக முறையை தூக்கியெறிய நக்சல்கள் முயற்சிக்கின்றனர். மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட வேண்டும். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் கூடுதலாக உள்ளது. பொருளாதார முன்னேற்றம் வளர்ச்சி திட்டங்கள் மூலமே பழங்குடியினர் மத்தியில் வறுமையை ஒழிக்க இயலும். நமது நாட்டில் பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்பி உள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: