முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்சன் மண்டேலா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

ஜோஹன்ஸ்பர்ர், ஜூன்.12 - தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று தென் ஆப்பிரிக்க அதிபர் தெரிவித்தார். பிரிடோரியா மருத்துவமனையில் நெல்சன் மண்டேலா சிகிச்சை பெற்று வருகிறார்.

மண்டேலாவுக்கு சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் குழுவினரிடம் அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்று தற்போதைய அதிபர் ஜேக்கப் சுமா கேட்டறிந்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, அவரது உடல்நிலை, சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது நோய், அதற்கு அளிக்கும் சிகிச்சை பற்றி டாக்டர்கள் விரிவாக விளக்கிக் கூறினர். 

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தபோதிலும்,அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது.         அவரது உடல்நிலை காரணமாக அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையால் எந்தவித பயனும் இல்லை. 4-வது நாளாக அவர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகிறார். அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதை அடுத்து அவரது மனைவி தனது லண்டன் பயணத்தை ரத்து செய்துவிட்டு தனது கணவர் அருகிலிருந்து கவனித்து வருகிறார். இவரது பிறந்த நாள் அடுத்த மாதம் வருகிறது. இவரை பிழைக்க வைக்க டாக்டர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு நன்றாகக் கவனித்து வருன்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்