முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து ரூ.71-லட்சம்

சனிக்கிழமை, 8 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.9 - எனது சொத்துமதிப்பு ரூ.71 லட்சம் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இவர் டெல்லி சட்ட சபை தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக இவர் சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார்.

டெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் அமைச்சராகியுள்ளார் ஷீலா தீட்ஷித். இவர் வெற்றிபெற்ற தொகுதியில் போட்டியிட அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். ஷீலா போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று ஏற்கெனவே அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இவரது சொத்து மகிபபு விவரம்:

இந்திரபுரம் பகுதியில் உள்ள நிலம். இதன் மதிப்பு ரூ.70 லட்சம். வங்கியில் டெபாசிட் ஆக உள்ளது ஒரு லட்சம் ரூபாய். இதுபோக இவரது மனைவி பெயரில் குர்கனில் உள்ள இடத்தின் மதிப்பு ரூ.1 கோடி. வங்கி டெபாசிட் 1 லட்சம். இவையெல்லாம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி தொகுதியில் போட்டியிட இவர் முடிவு செய்துள்ளதை அடுத்து அந்த தொகுதியில் உள்ள வீடூ வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். தனது மனுவில் 100 பேரிடம் கையெழுத்தும் வாங்கினார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இவர் மட்டுமே போட்டியிடுகிறார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் மேலும் 2 பேர் போட்டியிட கட்சி அலுவலகத்தில் மனு செய்துள்ளனர். இதில் ஒருவர் வாபஸ் வாங்கி விட்டார். மற்றொருவரது மனு சரிவர பூர்த்தி செய்யப்படவில்லை என்று அக்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். 

கெஜ்ரிவால் தனது இருப்பிடத்தை காசியாபாத்திலிருந்து, கிழக்கு டெல்லியில் உள்ள சுந்தர்நகரி என்ற இடத்துக்கு மாற்றிவிட்டார். காசியாபாத்தில் இவர் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்துவிட்டு, டெல்லி வாசிக்கான வாக்காளர் அடையாள அட்டையை வாங்கியுள்ளார். சட்ட சபை தேர்தலில் போட்டியிடும் ஒருவர் அந்த பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். எனவே அவர் தனது இருப்பிடத்தை டெல்லிக்கு மாற்றியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்