காங்கிரஸ் - பா.ஜ.க. அல்லாத அணியை உருவாக்க அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூன்.12  - வரும் நாடாளுமன்ற  தேர்தலுக்காக    காங்கிரஸ்   மற்றும் பா.ஜ.க.  அல்லாத   பிராந்திய    கட்சிகள்  அடங்கிய   முன்னணியை  உருவாக்க  வேண்டும் என  மேற்கு வங்க   முதல்வர்  மம்தா பானர்ஜி அழைப்பு  விடுத்துள்ளார்.  இது தொடர்பாக   அவர் திங்கள்கிழமை   கூறியதாவது: இது தொடர்பான  செயல்திட்டத்தை  வகுக்க  வேண்டும்.   மாநில கட்சிகள்  அனைவரும்  ஒன்றாக  கலந்து பேசி,  செயல்திட்டத்தை  நிறைவேற்ற வேண்டும். மாநில கட்சிகள்  சார்பில்  தேசிய அளவில்  புதிய  அணியை  உருவாக்குவதற்கான  நேரம்  வந்து விட்டது.  காங்கிரஸ்  மற்றும்  பா.ஜ.க.  அல்லாமல்  பிராந்திய  

கட்சிகள்  அனைத்தும்   ஒன்று சேர்ந்து  மக்கள் விரோத கொள்கை முடிவுகள் எடுக்கும்  தவறான ஆட்சியிடம்  இருந்து  நாட்டை காக்க வேண்டும்.  வலிமையான,  ஒளிமயமான   இந்தியாவை  உருவாக்க  பாடுபட வேண்டும்  என்றார் மம்தா  பானர்ஜி.

இதை ஷேர் செய்திடுங்கள்: