மாணவனை கூலிப்படையை ஏவி சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜூன். 12 - உத்தர பிரதேசத்தில் 8 ம் வகுப்பு மாணவர் ஒருவரை கூலிப்படை மூலம் சுட்டுக் கொன்றது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் மனித கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சஞ்சய் ராய். 12 ஆண்டுகளாக போலீஸாக இருக்கும் அவர் போலீஸ் பயிற்சிக்கு வந்த ஒரு இளம் பெண்ணை காதலித்தார். ஆனால் அவர் காதலை அப்பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராய் அப்பெண்ணின் குடும்பத்தாரை பழி வாங்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் அஜீத் ராய் மற்றும் ராகுல் ராய் ஆகியோருக்கு ரூ. 2.5 லட்சம் பணம் கொடுத்து அப்பெண்ணின் உறவினரான 8 ம் வகுப்பு மாணவன் மாஸை சுட்டுக் கொல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி அவர்கள் சிறுவனை சுட்டுக் கொன்றனர். அவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இன்ஸ்பெக்டர் சொல்லித் தான் சிறுவனைக் கொன்றதாக தெரிவித்தனர். இதற்கிடையே இன்ஸ்பெக்டர் தலைமறைவாகி விட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: