கிரிக்கெட் வீரர் அங்கீட் சவான் ஜாமீனில் விடுதலை

புதன்கிழமை, 12 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.13  - கிரிக்கெட் வீரர்அங்கீட் சவான் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த வழக்கில் 27 நாள்களாக சிறையிலிருந்து நேற்று ஜாமீனில் வந்த சவான் எனக்கு நீதி கிடைக்கும் என்றும் நீதித்துறை நல்ல முடிவு எடுக்கும் என்றும் நான் நம்பி இருந்தேன் என அவர் தெரிவித்தார்.    

ராஜஸ்தான் ராயல் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சவான், சாந்து ஆகியோர், அவர்களுடன் குற்றம்சாட்டப்பட்ட 27 பேருடன் ஜாமீனில் விடப்பட்டார். இவர்கள் அனைவருக்கும் டெல்லி கோர்ட் ஜாமீன் வழங்கியது. நீதித்துறைக்கு எனது நன்றி. நான் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தபோது எனக்கு ஆதரவரவும், பக்க பலமாகவும் இருந்த எனது பெற்றோர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் சவான்.

இந்த இரு கிரிக்கெட் வீரர்கள், மற்றும் அஜித் சண்டாலியா, 11 புக்கிகள்  கடந்த மே மாதம் 16-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏமாற்றுதல், சதி செய்தல் உள்ளிட்ட வழக்குகளை டெல்லி போலீஸார் பதிவுசெய்து வழக்கு தொடர்ந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: