முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து 6 பேர் சாவு

புதன்கிழமை, 12 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், ஜூன்.13  - சீனாவின் ஜியாங்ஸூ மாகாணத்தில் வெடி விபத்து   காரணமாக  மூன்று  மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில்  6 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.  ஜியாங்ஸூ  மாகாணம், சுஸவ் நகரில்  உள்ள மூன்று மாடி கட்டடம்  செவ்வாய்க்கிழமை   திடீரென்று  இடிந்து  விழுந்தது. கட்டட   இடிபாடுகளில்  சிக்கி  6 பேர்   சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். காயமடைந்த  9 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை  மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அக் கட்டடம் இடிந்து விழுந்ததற்கு  எரிவாயு கசிவால்  ஏற்பட்ட வெடி விபத்தே   காரணம் என்று போலீஸார்  நடத்திய  விசாரணையில்  தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்