முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா கண்காணிப்பு: விவரங்கள் கேட்க இந்தியா முடிவு

புதன்கிழமை, 12 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூன்.13 - அமெரிக்க கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்பான  விவரங்களை கேட்டறிய  இந்தியா முடிவு செய்துள்ளது.  அமெரிக்க உளவுத் துறை  தீவிரமாக  கண்காணித்து வரும் நாடுகளின்  பட்டியலில் இந்தியா 5​ - வது  இடத்தில்  உள்ளதாக  தகவல் வெளியாகிறது. உலகம் முழுவதும்  இணைய தளம் மூலம் பரிமாற்றப்பட்டு  வரும் தகவல்களை  கண்காணிக்க அமெரிக்கா ரகசிய நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின்  இந்த நடவடிக்கையை  ஏற்க முடியாது  என இந்தியா  ஏற்கெனவே தெளிவாக கூறிவிட்டது.  இது தொடர்பாக  வெளியுறவுத்துறை  செய்தித் தொடர்பாளர்  சையத் அக்பருதீன் செவ்வாய்க்கிழமை  கூறியதாவது: இணையதளம்  மூலம் பெறப்படும்  தகவல்களை  பரிமாறிக் கொள்ள தேசிய  பாதுகாப்பு  கவுன்சில்  மூலம்  பேச்சுவார்த்தை  நடத்தப்பட்டுள்ளது.   அமெரிக்கா கண்காணிப்பு   நடவடிக்கை  குறித்த   விவரங்களை  உரிய  அமைப்பின்  மூலம்  கேட்டுப் பெற  திட்டமிட்டுள்ளோம்.  இந்நடவடிக்கையால் இந்திய தனி நபர்  உரிமை தொடர்பான  சட்டங்கள்  மீறப்பட்டுள்ளதா  எனக் கேட்ட போது  அவர் கூறியதாவது: தனி நபர்  உரிமைகள்  மீறப்படுவதை  இந்தியா ஏற்காது.  ஒவ்வொரு  நாளும்  புது புது   பிரச்னைகள்  எழுகின்றன.  தற்போதே இது தொடர்பாக   எந்த முடிவுக்கும் வரமுடியாது. உரிய விவரங்கள்  கிடைத்தபின்  தான் தேவையான  நடவடிக்கையை  எடுக்க முடியும் என்றார் அக்பருதீன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago