முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் வயதான பெண் 127வது வயதில் சீனாவில் மரணம்

புதன்கிழமை, 12 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

பீஜிங்.ஜூன்.13 - உலகின் வயதான பெண்ணான சீனாவைச் சேர்ந்த லுவோ மெய்ழன் தனது 127வது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்தில் இருக்கும் லாங்ஹாங் கிராமத்தைச் சேர்ந்தவர் லுவோ மெய்ழென். சீன அரசு ஆவணங்களின்படி அவர் பிறந்த வருடம் 1885. அப்படி என்றால் அவருக்கு வயது 127. முறைப்படி அவருக்கு தான் உலகில் வயதானவர் என்ற பெருமை கிடைத்திருக்க வேண்டும். ஏனென்றால் உலகின் வயதானவராக தற்போது கருதப்படும் ஜப்பானின் ஜீரோமோன் கிமுராவுக்கு வயது 116 தான். லுவோ பிறந்து பல ஆண்டுகள் கழித்து தான் சீனாவின் பிறப்பு தேதிகளை முறையாக பதிவு செய்யும் திட்டம் வந்துள்ளது. அதனால் லுவோவின் வயதை சீன அதிகாரிகள் 127 என்று கூறினாலும் அதை சர்வதேச அதிகாரிகள் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் லுவோ தனது 127வது வயதில் காலமானார். அவருக்கு 5 பிள்ளைகள், ஏராளமான பேரக் குழந்தைகள் உள்ளனர். அவர் தனது 61வது வயதில் குழந்தை பெற்றதாக அவரது மகன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago